Syria: அலெப்போ நகரில் மிகபெரிய தாக்குதல் நடந்து இருக்கிறது.ராணுவ ஜெனரல் செர்ஜி சுரோவிகி சிரியா நாட்டுக்கு அனுப்ப புதின் முடிவு.
சிரியா நாட்டில் சரிய அரசு குடியரசினால் இந்த ஆண்டு 2024 மொத்த மக்கள் தொகை கணக்கு எடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் அந்த நாட்டில் 24,672,760 வசித்து வருகிறார்கள். இந்த நாடு முஸ்லிம் மதத்தை பின்பற்ற கூடிய நாடு ஆகும்.இந்த முஸ்லிம் மக்களில் ஷியா, சன்னி இரண்டு பிரிவுகள் இருக்கிறது.
ஆனால் சிரியா உள்ள மக்கள் தொகையில் 74%க்கு அதிகமானவர்கள் சன்னி முஸ்லிம் இனத்தவர்கள் ஆவர்கள். ஷியா முஸ்லிம் இனத்தவர்கள் 12% என்ற அளவில் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இந்த ஷியா முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் தான் அந்த நாட்டு பிரதமர் பஷர் அல் அசாத். அவருக்கு எதிராக கடந்த 2000 ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
பஷர் அல் அசாத் ஆதரவு குழுக்கள் மற்றும் அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் போர் நடந்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக உள்ள குழுவுக்கு ரஷ்யா உதவி செய்து வருகிறது. சன்னி முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க, ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உதவிகளை செய்து வருகிறது.
இதனால் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை போடப்பட்டு இருந்தது. அதன் பிறகு மீண்டும் சிரியாவில் போர் வெடித்து இருக்கிறது. சிரியா அரசுக்கு எதிராக செயல்படும் “ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம்” அமைப்பினர் சிரியா நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இது அரசுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா படைகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மேலும் முக்கிய நகரமான அலெப்போ மீதி மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது.
இதனால் ரஷ்யா ராணுவ ஜெனரல் செர்ஜி சுரோவிகி மீண்டும் சிரியாவுக்கு அனுப்ப ரஷ்யா அதிபர் புதின் முடிவு செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.