நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!

0
223

நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி பிரச்சனைகள் வருவது இயல்பாகிவிட்டது. நாம் உண்ணும் உணவுகளில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் மூட்டு வலி ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு மூட்டு வலியால் நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் இந்த பதிவில் காணும் மூன்று பொருட்களை பாலில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை குடிப்பதன் மூலம் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், ரத்த குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஞாபக சக்தி குறைபாடு,நீரழிவு நோய் ,புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவைகள் வராமல் பாதுகாக்கின்றது.

முதலாவதாக நாம் எடுத்துக் கொள்வது இலவங்கப்பட்டை. சமையலில் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். ஒரு டம்ளர் பசும்பாலை காய வைத்து அதில் ஒரு லவங்கப்பட்டையை சிறிய சிறிய துண்டுகளாகி சூடாக உள்ள பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனை குடிக்க வேண்டும்.

இதனை இரவு தூங்க செல்லும் பொழுது தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வர வேண்டும் அவ்வாறு குடித்து வந்தால் உங்கள் உடம்பில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலுபெறும். இரண்டாவதாக பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நான்கு பாதாம் மற்றும் எடுத்துக் கொண்டால் போதும்.

சாப்பிடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னால் பாதாமை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதில் உள்ள தோலை நீக்க வேண்டும். பாதாமை நன்கு இடித்து ஒரு டம்ளர் பசும்பாலை சூடாக்கி அதில் இடித்து வைத்துள்ள பாதாமை கொதிக்க வைத்து இரவில் தூங்கச் செல்லும் முன்பு குடிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வருவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சீராக இருக்கும்.

மூன்றாவதாக கசகசா எடுத்துக் கொள்ள வேண்டும். அளவற்ற பயன்கள் நிறைந்துள்ளது. ஒரு பொழுதும் கசகசாவை அளவுக்கு மீறி பயன்படுத்தக் கூடாது. இதனை கால் டீஸ்பூன் பயன்படுத்தினால் போதும் முழு பலன்கள் கிடைக்கும். டம்ளர் பசும்பாலை சூடாகி அதில் கால் டீஸ்பூன் கசகசாவை போட்டு கொதிக்க வைத்து இரவு தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிட்டதற்கு பிறகு குடித்து வந்தால் நம் உடலுக்கு சோர்வு என்பதே வராது.