Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!..

A husband and wife survived with minor injuries when a truck collided with a car in Tirupur district!..

A husband and wife survived with minor injuries when a truck collided with a car in Tirupur district!..

திருப்பூர் மாவட்டத்தில் லாரி மீதி கார் மோதியதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய கணவன் மனைவி!..

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேவுள்ள அங்காளம்மன் கோவில் அருகே கோவையிலிருந்து ஒரு லாரி லோடு ஏற்றி கொண்டு கரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இவ்வழியாக கோவையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்வதற்காக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் லாரியின் பின்னால் தொடர்ந்து சென்றது.

ஒரு கட்டத்தில் கார் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் முன்பாகம் நொறுங்கியது. கார் உள்ளிருந்த கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. பிறகு விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் காயம் அடைந்தால் கணவன் மனைவி இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்தை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version