Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அழகாய் இருக்கிறாய்! அதனால் பயமா இருக்கு! கணவன் செய்த செயல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவி அழகாக இருக்கிறார் என்பதால் அவர் மேல் சந்தேகப்பட்டு கல்லை போட்டு கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பள்ளசூளகரை என்ற பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவரது மனைவி ருக்குமணி. இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனால் குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது.

ருக்மணி அழகாக இருப்பதால் திருமணம் ஆனதில் இருந்து தங்கராஜ் ருக்மணி மீது சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. தங்கராஜ் டெய்லர் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கமும் அதிகமாக இருந்துள்ளது. வீட்டு செலவிற்கு எந்த ஒரு பணமும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் ருக்மணி அருகில் உள்ள ஷூ கம்பனிக்கு வேலைக்கு சென்று உள்ளார். ருக்மணி வேலைக்கு சென்றதால் சண்டை மேலும் அதிகரித்து உள்ளது.

இரவு ஆனால் இவர்களது சண்டை அக்கம்பக்கம் அறிந்ததே. அப்படித்தான் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே பெரிய சண்டை வந்துள்ளது. ரொம்ப போராடி முடியாத ருக்மணி தூங்க சென்றுள்ளார். ஆனால் தங்கராஜ் சந்தேகம் காரணமாக விடியும் வரை ருக்மணி அருகிலேயே உட்கார்ந்து கொண்டுள்ளார். மீண்டும் ஆத்திரம் தாங்காத தங்கராஜ் ஒரு 30 கிலோ எடை கொண்ட கல்லை தூக்கி கொண்டு வந்து, தூங்கிக்கொண்டிருந்த ருக்மணி தலை போட்டு கொன்றார்.

கல்லை போட்டதால் தலை சிதறி ருக்மணி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ சென்று தங்கராஜை கைது செய்தனர். ருக்மணியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு தவறும் செய்யாத ருக்மணி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version