டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிஜிசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது! வாக்-இன் செல்ல ரெடியா?

0
85

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பிஜிசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது! வாக்-இன் செல்ல ரெடியா?

பிஜிசிஐஎல் – PGCIL:

மத்திய மின் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limited or PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி உள்ளது.

காலியிடங்கள் & தேவைப்படும் ஆட்கள்:

பிஜிசிஐஎல் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் மொத்தம் 425 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

டிப்ளமோ டிரெய்னி(எலக்ட்ரிக்கல்) – 344 பேர்
டிப்ளமோ டிரெய்னி (சிவில்) – 68 பேர்
டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) – 13 பேர்

கல்வி தகுதி:

*டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணி: டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்,பவர் சிஸ்டம்ஸ் என்ஜினீயரிங்,பவர் என்ஜினீயரிங் (எலக்ட்ரிக்கல்) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

*டிப்ளமோ டிரெய்னி (சிவில்) பணி: டிப்ளமோ சிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

டிப்ளமோ டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்) பணி: டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன்,எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேசன்,எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன்,டெலிகம்யூனிகேசன் என்ஜினியரிங் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு: பிஇ,பிடெக்,எம்டெக்,எம்இ இதுபோன்ற படிப்பை முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியாது.

வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது 27க்குள் இருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒபிசி பிரிவினருக்கு 3 வயது,மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது, எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை வயது தளர்வு வழங்கப்பட உள்ளது.

ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.1,17,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் ஆர்வம் இருபவர்கள் செப்டம்பர் மாதம் 1 முதல் 23 ஆம் தேதிக்குள் www.powergrid.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.300 வசூலிக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.