பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை கதற கதற கற்பழித்து விட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்தவர் அருண் என்பவர் அவருக்கு 28 வயது ஆகிறது. டிரைவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று 27 வயதுடைய அந்த பெண்ணை கடன் தருவதாக காரில் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தனர் என அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் நடந்ததை வெளியே சொன்னால் உன்னையும் உன் குழந்தைகளையும் கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பெயரில் டிரைவர் அருணை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் போலீசாரின் தரப்பில் அந்தப் பெண் கூறியது அத்தனையும் பொய் என்று கூறுகிறார்கள். சம்பவத்தன்று அந்த பெண் பதினோரு மணிக்கு என்னை நான்கு பேர் காரில் அழைத்துச்சென்று கதற கதற கற்பழித்தார்கள் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கும் பொழுது அதை மாற்றி மாற்றிப் பேசி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொண்டபோது தான் உண்மை தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் கூலி வேலை செய்கிறார். அதனால் டிரைவர் அருணுக்கும் இந்தப் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நன்று ஊர் ஊராக சுற்றி இருக்கின்றனர். அன்றைக்கு திடீரென கணவனிடம் இருந்து போன் வரவே கணவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் 4 பேர் பலாத்காரம் செய்கின்றனர் என கூறியுள்ளார்.
கணவரை நம்ப வைப்பதற்காக நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கண்ணீர்மல்க நான்கு பேர் என்னை கூட்டு பலாத்காரம் செய்து விட்டார்கள் எனவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில்தான் டிரைவர் உள்ளே இருக்கிறார். இதைக்கேட்ட போலீசார் ஒருபுறம் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.