Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமரிடம் தமிழில் பேசிய மதுரையைச் சார்ந்த பெண்மணி!

கள்ளிக்குடியில் 4️ வருடங்களாக சிறுதானிய உணவுகளை பாக்கெட்டில் தயார் செய்து விற்பனை செய்து வரும் தமிழ்ச்செல்வி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி உடனான தன்னுடைய அனுபவங்களை விவரித்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நான் எம் ஏ, எம் எஸ் சி, எம் எட், முடித்திருக்கிறேன். கணவர் வெங்கடேஷ்குமார் விபத்தில் சிக்கிய போது அவரை மீட்க பாட்டி வைத்திய உணவு முறைகளை கையாண்டோம்.

அப்போதிருந்து சிறுதானியங்களின் அருமை புரிய தொடங்கியது குடிசை தொழிலாக சத்து மாவு தயார் செய்து விற்பனை செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அதன் பிறகு மதுரையில் இருக்கின்ற கதர் கிராம தொழில்கள் ஆணையத்தில் கடன் பெற்று தொழிலை விரிவு படுத்தினேன்.

உடனடியாக சமைக்கும் விதத்தில் தினை பொங்கல் வரகு உங்கள் போன்ற 60 விதத்திலான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அவருடைய கணவர் விற்பனையை கவனித்து வருவதாகவும் சொன்னார்.

அதோடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தினம் அன்றைய தினம் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு என்னை பங்கேற்குமாறு கதர் கிராம தொழில்கள் ஆணையை இயக்குனர் அசோகன், உதவி இயக்குனர் அன்புச்செழியன், அழைப்பு விடுத்தனர்.

அதனடிப்படையில் தமிழகத்திலிருந்து இரண்டு பேர் மட்டுமே சென்றிருந்தோம் பல மாநிலங்களை சார்ந்த 13 பேர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 50 பேர், உள்ளிட்டோர் பங்கேற்றத்தில் 5 பேருக்கு மட்டுமே பிரதமரிடம் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

பிரதமரை அருகில் பார்க்கும் போது என்னை அறியாமல் கைகளை மேலே உயர்த்தினேன், அவர் பேசுங்கள் என்று தெரிவித்தார் என கூறியிருக்கிறார் அந்த பெண்மணி.

அவர் பிரதமரிடம் பேசும் போது தமிழ்ச்செல்வி ப்ரம் தமிழ்நாடு என்றவுடன் வணக்கம் என்று தமிழில் தெரிவித்தார், தமிழகத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஆங்கிலத்தில் விலக்கியவுடன் நல்லது உள்ளூர் விற்பனையிலும் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார்.

ஆனால் எனக்கு பிரதமருடன் பேசியது கனவு போல இருக்கிறது, கே வி ஐ சி யில் கடன் பெற்று சிறிதளவில் தொழில் செய்து வருகிறேன். இன்னமும் பெரிய வெற்றி பெற்று மீண்டும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று கூறியிருக்கிறார். தமிழ்ச்செல்வி அவருடைய இந்த முயற்சி இன்னமும் வெற்றி பெற்று அவர் பெரிய அளவில் சாதனை புரிய நாமும் வாழ்த்துவோமாக.

Exit mobile version