Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்சியினுடைய அடிமட்ட தொண்டனையும் சிந்திக்கும் தலைவர்!! பனையூரில் நடந்தது இதுதான்!!

A leader who thinks about the bottom line of the party!! This is what happened in Panayur!!

A leader who thinks about the bottom line of the party!! This is what happened in Panayur!!

தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக தன்னுடைய கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் விதமாகவும் அதற்கு முன்பாக கட்சியினுடைய மாவட்ட செயலாளர்களை அதாவது 120 மாவட்டத்தின் செயலாளர்களை பிரிப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நேற்று 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டதோடு மற்றும் 19 மாவட்ட செயலாளர்களுக்கு நியமன ஆணையுடன் வெள்ளி நாணயங்களை வழங்கி விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக நிர்வாகிகளிடம் பேசிய தலைவர் அவர்கள், மாவட்ட செயலாளர்கள் குறித்து கட்சியினுடைய தலைமைக்கு ஏதேனும் புகார்கள் வந்தது என்றால் தலைமை தயங்காது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.

மேலும் கட்சிக்காக உழைக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய நிர்வாக வாய்ப்பு என்பதையும் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தலைவர் விஜய் அவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் இயக்கமாக இருந்த பொழுது எந்த அளவிற்கு அனைவரும் இணைந்து தீவிரமாக பணிபுரிந்தீர்களோ அதே போல் கட்சிக்காகவும் நீங்கள் அனைவரும் தீவிரமாக இணைந்து பணி புரிய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு மட்டுமில்லாத உங்களை நம்பியே கட்சியை தொடங்கி இருக்கிறேன் என நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடையே கூறிய விஜய் அவர்கள் கட்சிக்காக பாடுபடக்கூடிய ஒவ்வொரு தொண்டருக்கும் அவருக்கு உரிய நிர்வாக பொறுப்பானது தரப்பட வேண்டும் என்றும் அந்த இடத்தில் தவறுகள் நடக்கிறது என்றால் உடனடியாக அதனை சரி செய்து அந்த இடத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version