ஓயாமல் கடித்து இரத்தம் உறிஞ்சும் கொசுக்களை விரட்ட ஒரு எலுமிச்சை தோல் போதும்!!
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.சுகாதாரமற்ற சூழல் நிலவும் இடத்தில் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகும்.இந்த கொசுக்களால் டெங்கு,மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் உருவாகிறது.உலகில் கொசுக்களால் ஏற்படும் உயிரிழப்பு சற்று அதிகமாக உள்ளது.
எனவே வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.கொசுக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தால் அதை கட்டுப்படுத்த சில எளிய வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழ தோல்
2)கிராம்பு
3)நல்லெண்ணெய்
4)திரி
செய்முறை:-
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை பிழிந்து கொள்ளவும்.இந்த சாற்றை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
அதன் பின்னர் அந்த எலுமிச்சை தோலை எடுத்து சாறு பிழிந்த பக்கத்தை உட்புறமாக குழி செய்து அதில் இரண்டு கிராம்பு மற்றும் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும்.
பிறகு அதில் ஒரு திரி போட்டு தீபம் ஏற்றவும்.இரண்டு எலுமிச்சம் பழத் தோலிலும் இது போன்று செய்து கொள்ளவும்.
இந்த எலுமிச்சை தீபத்தை வீட்டில் கொசுக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வைத்து விட்டால் அதில் இருந்து வரும் வாசனை கொசுக்களை எளிதில் விரட்டி விடும்.