Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்!

A letter that goes viral on the Internet! A government employee who asked for leave to pacify his wife!

A letter that goes viral on the Internet! A government employee who asked for leave to pacify his wife!

இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்!

ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஊழியர்கள் விடுமுறை எடுக்கும் போது மேலதிகாரிகளுக்கு கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ விடுப்பு அழிக்க  வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்புவார்கள். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அவரது மேல் அதிகாரி  ஒருவருக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார்.

மேலும் அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அவரது மனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மனைவி சென்றதால் அதிக மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் தற்போது தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வருவதற்கு ஆகஸ்ட் 4 முதல் ஆறாம் தேதி வரை விடுப்பு வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அரசு ஊழியரின் அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version