மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் நூலகம்!! திறப்பு விழா முதல்வர் வெளியிட்ட தகவல்!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதி பிறந்த நுற்றாண்டையோட்டி, தமிழக அரசு சார்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் பிரமாண்டாமாக மிக பெரிய அளவில் நூலகம் கட்டப்பட்டு வந்தது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் ஜூலை 15 ஆம் தேதி திறப்பு விழா நடைபெறும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நூலகம் 134 கோடி செலவில் 2,13,334 சதுரடி பரப்பளவில் 6 தளங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் அனைத்து வசதிகளும் பொருந்தி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த நூலகத்தை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இந்த நூலகத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான புத்தங்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன்பின் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழா நடைபெற உள்ளதால் மதுரை மாநகரம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது மற்றும் தீவிர கணிகாணிப்பும் மேற்கொண்டு வருகிறார்கள்.