பேன் தொல்லை? அப்போ வீட்டு வைத்தியத்தை கையில் எடுங்கள்.. ஒரே நாளில் தீர்வு காணுங்கள்!!

0
134
#image_title

பேன் தொல்லை? அப்போ வீட்டு வைத்தியத்தை கையில் எடுங்கள்.. ஒரே நாளில் தீர்வு காணுங்கள்!!

தலை முடிகளை மிகவும் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும். ஒருவேளை பராமரிக்க தவறினால் நிச்சயம் பேன்,பொடுகு, அரிப்பு உள்ளிட பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்ற முடியும் கொட்டும் சூழல் ஏற்பட்டு விடும். நாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது பேன் பாதிப்பை சந்தித்து இருப்போம். இந்த பேன்கள் மண்டையில் இருக்கும் அழுக்கு மற்றும் ரத்தத்தை உறிந்து உயிர் வாழும் தன்மையை கொண்டிருக்கிறது. இதை நம் தலைகளில் இருந்து வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்று நினைத்து ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி முடி வளர்ச்சியை நாம் கெடுத்து கொள்கிறோம். ஆனால் பேன், பொடுகு, ஈறு தொல்லை நீங்க இயற்கை முறையில் பல்வேறு தீர்வுகள் இருக்கிறது. அதில் ஒரு தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை முறையாக பாலோ செய்து பலனை அடையுங்கள்.

பேன் தொல்லை நீங்க சில எளிய வழிகள்:-

1)வேப்பிலை மற்றும் துளசியை சம அளவு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை தலைக்கு அப்ளை செய்து குளிப்பதன் மூலம் பேன் தொல்லை தீரும்.

2)உப்பு மற்றும் வினிகரை சம அளவு ஒரு பவுலில் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை முடிகளுக்கு ஸ்ப்ரே செய்யவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்னர் தலைக்கு குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.

3)தூயத் தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் சூடம்(கற்பூரம்) 2 எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும். பின்னர் இதை தலைக்கு அப்ளை செய்து இரவு முழுவதும் விட்டு விடவும். மறுநாள் காலையில் தலைக்கு குளிக்கும். இவ்வாறு செய்தால் ஈறு, பேன் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

4)சிறிதளவு பூண்டை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து தேவையான அளவு தூயத் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடம் விட்டு கூந்தலை அலசவும். இவ்வாறு செய்தால் பேன் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.