Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

#image_title

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் மக்கள் தேவைக்கு வெளியில் வரும்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன், கண்ணிற்கு குளிர் கண்ணாடி மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

மேலும் கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். மக்கள் வெளியில் செல்லும் போது, வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு தாகம் ஏற்படுகிறது. இதை போக்க மக்கள் பழச்சாறு, தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை அருந்தி அவர்களது தாகத்தை போக்கி கொள்கின்றனர். வெயிலின் தாக்கத்திற்கும், தாகத்திற்கும், கால்நடைகளும் விதிவிலக்கல்ல.

இந்நிலையில், புதுச்சேரி, கடலூர் சாலையில் உள்ள நீதிமன்றத்தின் எதிரே உள்ள சாலை ஓரத்தில் இருக்கும் குடிநீர் குழாயில், தாகம் தாங்க முடியாத ஆடு ஒன்று தண்ணீர் அருந்தி கொண்டே இருந்தது. அந்த வழியே சென்ற பொதுமக்கள் இதை பார்த்து ரசித்தனர். தற்போது இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி  உள்ளது.

Exit mobile version