Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பம் குறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் ,போலீசார்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் அரவக்குறிச்சி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் அந்த பகுதியில்  முழுவதும் சிறிது நேரம்  பரபரப்பு நிலவி காணப்பட்டது.

Exit mobile version