இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு! பட்டதாரி பெண் தற்கொலை இதுதான் காரணமா?

0
115
A lot of excitement in this area! Is this the reason for suicide of female graduate?

இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு! பட்டதாரி பெண் தற்கொலை இதுதான் காரணமா?

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்தவர் தனபால். இவர் தனியார் மில்லில் சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருடைய  மனைவி நந்தினி (31). இவர் பி ஏ ,பி எட் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவர்களின் மகனுக்கு காதணி விழா நடத்த வேண்டும் என கணவன் மனைவி இருவரும் முடிவு செய்தனர்.

மேலும் அந்த காதணி விழாவிற்காக உறவினர்கள் யாரையெல்லாம் அழைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடி வந்தனர். நேற்று காலையில் மகன் காதணி விழாவிற்கு உறவினர்களை அழைப்பதை தொடர்பாக கணவன் மனைவி இடையே  தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு  முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரிடம் கோபித்துக் கொண்டு நந்தினி அவரது அறைக்கு சென்றுள்ளார்.

மேலும் கணவர் தனபால் மனைவி நந்தினியின்  கோபம் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என எண்ணி அமைதியாக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் மனைவி அறையை விட்டு வெளியே வராத காரணத்தால் தனபால் நந்தினி இருக்கும் அறைக்கு. சென்றுள்ளார். அங்கு  நந்தினி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தா.ர் அதனை கண்ட தனபால் அதிர்ச்சி அடைந்து மனைவியை தூக்கில் இருந்து கீழே இறக்கினார்.

மேலும் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் நந்தினியை மீட்டு  சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேய நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாதானபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நந்தினி திருமணமாகி ஐந்து ஆண்டுகள் முடியாததால் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மகன் விழாவை தொடர்பாக ஏற்பட்ட இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.