Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கையை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து காதலிக்கு அனுப்பி நிர்வாண புகைப்படம் கேட்ட காதலன்!

பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் காதலன் பரப்பிய சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த மாணவி. சென்னையில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கு அந்த மாணவியின் தோழியான உறவினர் மெல்வின் செல்வகுமார் என்ற ஒருவருடன் காதலிப்பதாக கூறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதற்கிடையே அந்த மாணவி சொந்த ஊருக்கே திரும்பி போக அங்கேயே படிப்பை தொடர்ந்துள்ளார்.

இப்படி போக மாணவியும் மெல்வின் செல்வகுமார் இருவரும் தொலைபேசி மூலம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் புகைப்படத்தை மெல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார். உடனே மெல்வின் கையை அறுத்து இரத்தம் சொட்ட சொட்ட வீடியோ எடுத்து மாணவிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடைய சில போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையே ஆடைகளின்றி புகைப்படம் அனுப்புமாறு மெல்வின் மாணவியிடம் கேட்டுள்ளார். மெல்வின் செல்வகுமாரை நம்பி, அரை நிர்வாண புகைப்படங்களை அந்த மாணவி அனுப்பியுள்ளார். கடந்த வாரம் மாணவியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர், மாணவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதாக அவரது வீட்டில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மாணவியிடம் விசாரித்து அடித்து உள்ளனர்.

உடனே நடந்த விவரத்தை மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மெல்வின் செல்வகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version