நாளை உருவாகிறது..வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!! வானிலை மையம் எச்சரிக்கை!!

0
70
A low pressure area is forming in the Bay of Bengal tomorrow!! Weather Center Warning!!

சென்னை வானிலை ஆய்வு மையம்: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 22.11.2024 ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 23.11.2024 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அது வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த இரண்டு தினங்களில் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதனை தொடர்ந்து தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அதனை தொடர்ந்து 26-ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகா மூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில பகுதிகளில் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31-24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.