Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சற்றுமுன்பு உருவானது வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு!! தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட்!!

A low pressure formed in the Bay of Bengal recently!! Orange Alert across Tamil Nadu!!

A low pressure formed in the Bay of Bengal recently!! Orange Alert across Tamil Nadu!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்க கடலில் இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடுவிக்கபட்டுள்ளது. இதனால் 12 முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு பொய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

Exit mobile version