முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை மறைய வைக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.சருமம் சார்ந்த எந்தஒரு பாதிப்பையும் வேப்பிலை செய்கிறது.
பருக்கள்,சரும வறட்சி,கரும்புள்ளி,தழும்புகள் உள்ளிட்ட சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய வேப்பிலை பயன்படுத்தலாம்.
முகத்தில் பருக்கள் வந்தால் சிலருக்கு அவை கரும்புள்ளிகளாக மாறிவிடும்.இதனால் முக அழகு முழுமையாக குறைந்து தன்னம்பிக்கையை குறைத்துவிடும்.அதேபோல் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டால் அவை நாளடைவில் தழும்புகளாக மாறி அழகை கெடுக்கும் விதமாக மாறிவிடுகிறது.
எனவே முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் அனைத்தும் குணமாக வேப்பிலை க்ரீம் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – ஐந்து கொத்து
2)கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)கஸ்தூரி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
கால் கைப்பிடி அளவு பிரஸ் வேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் வேப்பிலை பேஸ்ட்,கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
இந்த வேப்பிலை பேஸ்டை கரும்புள்ளிகள்,தழும்புகள் மீது பூசி வந்தால் அவை இயற்கையான முறையில் மறைந்துவிடும்.வேப்பிலையை அரைத்து முகத்தில் பூசி வந்தால் சரும தோல் மிருதுவாக மாறிவிடும்.