Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயதானதை குறைத்து இளமையை கூட்டும் மந்திர ட்ரிங்க்!! 30+ பெண்கள் அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்!!

பெண்கள் தங்களை எப்பொழுதும் இளமையாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு சாதனப் பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துகின்றனர்.தற்பொழுது சந்தையில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் அதிக கெமிக்கல் நிறைந்தவையாக இருப்பதால் அதை பயன்படுத்தி வந்தால் சரும அலர்ஜி,சரும சுருக்கம் போன்ற அபாயங்கள் ஏற்பாடக் கூடும்.

எனவே இயற்கையான முறையில் தங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள,இளமை பொலிவை அதிகரிக்க பீட்ரூட் மற்றும் கேரட் வைத்து ஜூஸ் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)கேரட் – ஒன்று
3)தக்காளி பழம்(மீடியம் சைஸ்) – ஒன்று
4)தேன் – 20 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதல் படி:

ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் சீவிய பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது படி:

அடுத்து ஒரு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது படி:

இப்பொழுது மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் பீட்ரூட் துண்டுகளை அதில் போட்டு கொள்ளுங்கள்.

நான்காவது படி:

பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத் துண்டுகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாவது படி:

இந்த பானத்தை கிளாஸ் ஒன்றில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.அடுத்து தங்களுக்கு தேவையான அளவு தேனை அதில் ஊற்றி நன்கு கலந்து பருகுங்கள்.

இந்த பானத்தை தினமும் பருகி வந்தால் சருமத்தில் சுருக்கம் விழுவது கண்ட்ரோல் ஆகும்.இந்த பீட்ரூட் பானத்தை தினமும் பருகி வந்தால் 30 வயது கடந்தவர்களும் முதுமை தோற்றத்தை அடையாமல் இருப்பார்கள்.சருமத்தில் உள்ள சுருக்கம் நீங்கி சருமப் பொலிவு அதிகரிக்க இந்த பீட்ரூட் சாறு செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதல் படி:

ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டாவது படி:

பிறகு மிக்சர் ஜாரில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து எடுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த பீட்ரூட் பானம் இளமையை அதிகரிக்க உதவுகிறது.

Exit mobile version