Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கத்தி படம் போல் நீதிபதி முன்பு தனது கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!

பாலியல் வழக்கு போடப்பட்டதால் நீதிபதி முன்னாலேயே கழுத்தை அறுத்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

2016ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக 16 மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிறுமிக்கு வன்கொடுமை நேர காணமாக இருந்ததாக அவரது அம்மா, அப்பா, அண்ணன், சிறுமியின் அத்தை மற்றும் அத்தை மகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிவகங்கையில் உள்ள பெண்கள் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மீதான வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் மீதான விசாரணைகள் முடிந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவங்கங்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் அத்தை மகனான அசோக், பாலியல் குற்றச்சாட்டில் தனதுக்கும், தனது தாய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என நீதிபதியிடம் கூறியதுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிதிபதி முன்பே தனது கழுத்தை அறுத்துக் கொண்டான். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கேயும் கோபமடைந்த அந்த இளைஞன் மருத்துவமனை கதவுகளை அடித்து உடைத்தார்.

பின்னர் அவனை கட்டுப்படுத்திய போலீசார் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். கொட்டும் ரத்தத்துடன் ஸ்டெச்சரில் சென்ற அந்த இளைஞர் தன்னையும், தனது தாயையும் வேண்டுமென்றே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version