pmk: ரயில் சக்கரத்திற்கு நடுவே அமர்ந்து 250 கிமீ பயணம் செய்த நபரால் பரபரப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரயில் நிறுத்தத்தில் ரயில் சக்கரத்திற்கு இடையே இருந்து வெளியே வந்து இருக்கிறார். அவரை பார்த்த ரெயில்வே போலீசார் எப்படி சக்கரத்திற்கு நடுவே இருந்து வெளியே வருகிறாய் என கேள்வி எழுப்பி தீவிர விசாரணை செய்து இருக்கிறார்கள். அப்போது போலீசாரை மிரள வைக்கும் வகையில் பதில் ஒன்றை கூறி இருக்கிறார்.
தான் ரயிலில் பயணம் செய்ய காசு இல்லாததால் புனேவில் ரயில் சக்கரத்திற்கு நடுவே சென்று அமர்ந்து கொண்டதாக கூறினார். அவர் கூறியதன் அடிப்படையில் பார்த்தால் சுமார் 250 கி மீ தூரத்தை ரயில் சக்கரத்திற்கு நடுவே அமர்ந்து கொண்டு பயன் செய்து இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து ரயில்வே வாரிய தகவல் மற்றும் விளம்பரத்தின் செயல் இயக்குநர் திலீப் குமார் விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதாவது, ரயில் சக்கரம் எப்போது சுழன்று கொண்டுதான் இருக்கும். அதன் இடையே அமர்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என கூறினார். மேலும், அந்த இளைஞர்கள் தாங்கள் பார்க்கும் போது ரயிலுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார் அதன் பிறகுதான் சக்கரத்திற்கு நடுவே சென்று இருக்க வேண்டும் என கூறினார். பொதுவாக ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்கள் டிக்கெட் சோதனையாளரிடம் இருந்து தப்பிக்க ரயில் கழிவறையை பயன்படுத்துவார்கள்.