Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று மாலை தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை!

MK Stalin

MK Stalin

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் எல்லா கட்சியை சார்ந்தவர்களிடமும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நோய்த் தொற்றின் இரண்டாவது ஆலை பொது மக்களிடையே மாபெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றது. மனநிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போது அதன் ஒரு கட்டமாக மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ம் தேதி வரையில் 14 தினங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் பல நகர மற்றும் மாநகராட்சி கிராமப்புறங்களில் கூட ஊரடங்கு அமலில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் விதமாக மக்கள் நடமாட்டத்தையும், வாகனங்கள் அணிவகுப்பை காண இருக்கிறது. இந்த நிலையில், தற்போது போடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.நாடு முழுக்க தொற்று பத்து விழுக்காட்டிற்கு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு முழுமையான ஊரடங்கு தேவைப்படுகிறது என்று மத்திய அரசிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தான் இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது தளத்தில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருப்பதாக தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்துவது நோய் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தேவை அதோடு நோய் தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைத் போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு தற்போது இருக்கின்ற சூழலில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விவரங்கள் மட்டுமே ஒரே வழி என்ற சூழ்நிலையில், இதனை தீவிரப்படுத்துவது தொடர்பாக மே மாதம் 24ஆம் தேதிக்கு பின்னர் தற்போது இருக்கும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கின்றன.

Exit mobile version