கல்லூரி மாணவர்களுக்கு வந்த மெகா இன்ப அதிர்ச்சி!! யுஜிசி அதிரடி அறிவிப்பு!!

0
56
A mega pleasant surprise for college students!! UGC Action Announcement!

கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது.

யுஜிசி எனப்படுவது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு. இது இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வையிடவும்  உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பாகும். அந்த கல்வி அமைப்பில் நேற்று தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

இதில் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. அதில் மாணவர்கள் விரும்பினால் பட்டபடிப்பை முன்னரே முடித்துக்கொல்லம் என ஒப்புதல் பெறப்பட்டது. அதில் நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று ஆண்டுகள் கால இளங்கலை பட்டப்படிப்பை விரைவில் முடிக்க ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்பே முடித்துக் கொள்ளலாம் என University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது மட்டும் அல்லாமல் சற்று பின்தங்கிய மாணவர்கள் தனது பட்ட படிப்பை முடிக்க கூடுதலாக 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து செயல்படும் என கூறப்படுகிறது. இந்த முக்கிய தகவலை எடுக்க சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாணவர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.