Teachers: தமிழக அரசு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கவுள்ளது என இன்ப அதிர்ச்சியை அறிவித்துள்ளது. அதில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது.
ஒரு மாணவன் சிறந்த நிலையை அடைந்தார் என்றால் அதற்க்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒரு மாணவனுக்கு கற்றல் திறமையை வழங்க ஆரியர்களால் மட்டுமே முடியும். அந்நிலையில் தமிழக அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிக்கல்வித்துறை 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க www.sciencecitychennai.in என்ற இணையதளத்தின் மூலம் தகுதி உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், புவியியல், வேளான் நடைமுறைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மூலம் 23.12.2024 ஆம் தேதிக்குள் அறிவியல் நகர அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் இதில் வெற்றி பெரும் ஆசிரியர்களில் முதல் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த ஆசிரியர் என்ற சான்றிதல் மற்றும் ரொக்கப் பரிசு காசோலை சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என கூறப்படுகிறது.