போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! 

0
223
A member elected as mayor without competition! Is he the reason? DMK circles talk!
போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு!
இன்று(ஆகஸ்ட்6) கோவையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என்று திமுக வட்டாரங்கள் கூறியுள்ளதாம்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கோவை மாவட்டத்தின் மேயராக கல்பனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேயர் கல்பனா அவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.
அது மட்டுமில்லாமல் மேயர் கல்பனா அவர்களும் பல சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் சிக்கினார். இதையடுத்து திமுக கவுன்சிலர்களிடம் சமாதானம் செய்யும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் திமுக தலைமை அதிரடியான முடிவு ஒன்றை எடுத்தது.
அதாவது மேயர் கல்பனா அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மேயர் கல்பனா அவர்களும் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கோவை மாவட்டத்தின் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று(ஆகஸ்ட்6) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது நேற்று(ஆகஸ்ட்5) நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 29வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அவர்கள் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
ரங்கநாயகி அவர்கள் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் சில கவுன்சிலர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது. குறிப்பாக கவுன்சிலர் மீனா லோகு அவர்கள் தன்னுடைய பெயர் மேயர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் கண்ணீருடன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து இன்று(ஆகஸ்ட்6) மாநகராட்சி அரங்கத்தில் கோவை மேயர் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பாக மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் மட்டும் போட்டியிட அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தினால் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி அவர்களுக்கு கவுன்சிலர்களும், மாநகராட்சி ஆணையரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேயராக ரங்கநாயகி அவர்கள் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அந்த முன்னாள் அமைச்சர் வேறு யாரும் இல்லை. கோவை மாவட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தான் ரங்கநாயகி அவர்களை மேயராக தேர்வு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றது.