Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!

#image_title

கோபிசெட்டிபாளையம் அருகே, சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொலைக்காட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை கண்டு மனம் உடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையம் நந்தவன வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார்,இவர் கூலி வேலை செய்து வருகிறார்,இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இன்று அருள்குமார் வீட்டில் இருந்த போது அவர் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் மகன் வெளியே வராததால் அவரது தாய் வீட்டுக்குள் சென்று பார்த்த போது மகன் கழுத்தை அறுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருள்குமாரை கோபி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை செய்ததில் இவர் ஏற்கனவே ஒரு முறை தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும், நேற்று தொலைகாட்சி செய்தியில் சிறுமி பாலியல் வன்கொடுமை நடந்த செய்தியை கண்டு மனமுடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தகவல் தெரிவித்தனர்.

Exit mobile version