Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம்

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினி லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் தக்காளி வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வேடல் பகுதியில் சாலை ஓரம் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

சாலையில் நின்று கொண்டிருந்தசரக்கு லாரி மீது சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்காளி லோடு இறக்கி விட்டு அதி வேகமாக வந்த மினி லாரி பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தில் மினிலாரியில் வந்த திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த தக்காளி வியாபாரி கண்ணாதுரை, ஓட்டுநர் ரவி, உதவியாளர் ராகுல்,ஆகிய மூவரும் லாரிகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து
காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரிகளுக்கு இடையே சிக்கிய முவரையும் போராடி மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version