Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

#image_title

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பீகாரில் விநோதமாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது குறித்து அப்பகுதியில் அதிர்ச்சி நிலவி வருகிறது.

பீகாரில், சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசுதா பிரியா தேவி என்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அந்தக் குழந்தை நான்கு கைகள், நான்கு கால்கள், நான்கு காதுகள் இரண்டு இதயங்கள் மற்றும் ஒரு தலை, ஒரே ஒரு முதுகு தண்டுடன் விசித்திரமாகப் பிறந்துள்ளது. இதைப்பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்தக்குழந்தை பிறந்த இருபது நிமிடங்களிலேயே இறந்து விட்டது. இந்த வழக்கு சாப்ரா நகர், சியாம் சாக்கில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்புடையது.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மருத்துவமனை இயக்குனர் அனில்குமார் பேசியதாவது, இது ஒரு அரிய சம்பவம் என்றும், ஒரே கருப்பையில் ஒரே முட்டையில் இருந்து இரண்டு குழந்தைகள் உருவாகும் போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார்.

இரண்டு குழந்தைகளும் சரியான நேரத்தில் பிரிக்கப்பட்டால் இரண்டு குழந்தைகள் பிறக்கும் என்றும், அப்படி பிரிக்க முடியாத சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்றும் கூறி உள்ளார்.

இச்சம்பவம் அறிந்து மக்கள் பலர் இந்த குழந்தையைப் பார்க்க வெள்ளமாக மருத்துவமனைக்கு திரண்டு வருகின்றனர். மேலும் இது ஒரு தெய்வீகக் குழந்தை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version