Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்!! நிலாவில் ஏற்படும் வினோத மாற்றம் காணத்தவறாதீர்கள்!!

A miracle is about to happen in the sky tonight

A miracle is about to happen in the sky tonight

MOON: வழக்கமாக தெரியும் நிலவை விட இன்று இரவு வானில் நிலவு பெரிதாக தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் பெருநிலவை காண முடியும்  என கூறப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமையான  இன்று இரவு  வானில் பெரு நிலவை காணமுடியும். ஏனெனில் நவம்பர் 15 ம் தேதி பூமியிலிருந்து அருகில் ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆங்கில காலண்டர் படி ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பவுர்ணமிக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த முறை நவம்பர் மாதம் ஏற்படும் இந்த பெரு நிலவுக்கு பீவர் மூன் என்று பெயர்.இதற்கு மற்றொரு பெயர் சூப்பர் மூன்.

இன்று தெரியும் நிலவு மற்ற நாட்களில் தெரியும் நிலவை விட வழக்கத்திற்கு மாறாக 14 சதவீதம் பெரிதாக காணப்படும். பவுர்ணமியின் காரணமாக அதிக வெளிச்சமாக காணப்படும்.வழக்கமாக இந்த சூப்பர் மூன் ஒரு வருடத்திருக்கு 3 அல்லது 4 முறை தோன்றும். அந்த வகையில் இந்த வருடத்தின் கடைசி பெருநிலவு இன்று காணப்படும்.

இது இரவு சரியாக 7 மணிக்கு நன்றாக பார்க்க முடியும் . இதை நீங்கள் தவற விட்டால் அடுத்த ஆண்டு அக்டோபரில் தான் காண முடியும். இது வளிமண்டல காரணமாக நீல நிறத்தில் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த அதிசய நிலவை காண தவற விட்டால் அடுத்த ஆண்டுதான் காண முடியும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version