Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!!

#image_title

கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!!

முத்துசாமி மற்றும் அவர் மனைவி நாகூர் ஆசியான் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் இருவரும் தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி பகுதிலுள்ள பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொள்ள  தங்களின்  மனுவை கொண்டு வந்திருந்தார்கள்.

அப்போது முத்துசாமி மறைத்து எடுத்து வந்திருந்த  பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதையடுத்து  அலுவலகத்தின் வெளிய நின்று கொண்டிருந்த காவல்துறையினர்  அவரை தடுத்து தலையில் தண்ணீர் ஊற்றினார்.

அதன்பின் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தீக்குளிக்க முயன்ற  காரணத்தையும்  கேட்டு அறிந்தனர். அப்போது முத்துசாமி தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த உடையார் என்பவரின் மகன் ஆதிமூலம் தனது நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.

மேலும் அவர் எனக்கும் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இந்நிலையில்  அரசால் கலப்பு தம்பதிக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஆதிமூலம் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி ரத்து செய்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர்  இது குறித்து விசாரணை நடத்துவதாக கூறி அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை வாங்கி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்கள்.  மேலும் முத்துசாமி மனைவி மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version