Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

Pilgrims were electrocuted and 10 innocent people died!

 

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!..

பாளை ரெட்டியார் பட்டியை அடுத்த இட்டேரி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் இவருடைய வயது  35.இவர்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவரது மனைவி சக்திப்பிரியா.நெல்லையப்பன் மனைவி  இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக பணியாற்றி  வருகிறார்.நெல்லையப்பனுக்கும்  அதே பகுதியில்  உள்ள ஒரு நபருக்கும் அவ்வப்போது அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இவருக்கும் மற்றொருவருக்கும் அடிக்கடி  நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத சில நபர்கள் அவர் வீட்டு கதைவை தட்டியுள்ளார்கள்.ஆபாசமான வார்த்தைகளையும் சொல்லி அவரை மிரட்டியுள்ளார்கள்.மேலும் இவர்கள் கதவை திறக்காத நிலையில் மீண்டும் மீண்டும் கதவை தட்டியுள்ளார்கள்.கோபமடைந்த நெல்லையப்பன் ஒரு கட்டத்தில் கதவை திறந்தார்.அப்போது ஆயுதம் ஏந்திய  ஒரு கும்பல் நெல்லையப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நெல்லையப்பன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆயுதத்துடன் வீடு புகுந்து தாக்கியதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version