உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

0
134
#image_title

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!!

நமது காலில் இருக்கக் கூடிய ஆணி நமக்கு அதிக அளவு வலியை தரும். இந்த ஆணியை சரி செய்வதற்கு உதவும் சிறந்த மூன்று மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

நம் கால்களில் அதிக நேரம் அழுத்தம் கொடுப்பதாலும், அதிகம் நேரம் நடக்கும் பொழுது உராய்வு ஏற்படுவதாலும் கால்களில் ஆணி ஏற்படுகின்றது. இறுக்கமான காலணிகளை அணிவது, சாக்ஸ் இல்லாமல் ஷூ போடுவது, ஓடுவது, அதிக நேரம் நடப்பது போன்ற காரணங்களால் நமது கால்களில் ஆணி ஏற்படுகின்றது.

இந்த கால் ஆணிகளை நீக்குவதற்கு சிலர் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பார்கள். சிலர் நாட்டு வைத்திய முறையில் சிகிச்சை எடுப்பார்கள். நாம் இந்த பதிவில் இந்த ஆணியை மறைய வைக்க எளிமையான சிறப்பான மூன்று வீட்டு வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வழிமுறை 1:

கால்களில் ஏற்படுகின்ற ஆணியை மறைய வைக்க அம்மன் பச்சரிசி இலை சிறப்பான மருந்தாக இருக்கும். இந்த அம்மன் பச்சரிசி இலை செடியை உடைத்து அதில் இருந்து வரும் பாலை கால்களில் ஆணி இருக்கும் இடத்தில் குணமாகும் வரை தொடர்ந்து தேய்த்து வர வேண்டும். இதனால் ஆணி மூலமாக ஏற்படுகின்ற வலி குறையும். மேலும் நாட்கள் செல்ல செல்ல கால்களில் உள்ள ஆணி மறையும்.

வழிமுறை 2:

கால்களில் உள்ள ஆணியை மறைய வைக்க மருதாணி இலையை எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் சிறிதளவு மஞ்சள் துண்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து இரவு தூங்குவதற்கு முன்னர் காலில் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். இவ்வாறு தெடர்ந்து பத்து நாள் செய்தால் கால்களில் உள்ள ஆணி மறைந்து விடுகின்றது.

வழிமுறை 3:

சித்திரமுலம் அல்லது கொடிவேலி இரண்டில் எதாவது ஒன்றை புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து அதை இரவு தூங்குவதற்கு முன்னர் காலில் ஆணி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதை தொடர்ந்து மூன்று நாள் செய்து வந்தால் காலில் உள்ள ஆணி மறையும். இந்த வழிமுறையை பயன்படுத்தும் பொழுது காலில் புண் ஏற்படும். அந்த புண்ணை மறைய வைக்க ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் எடுத்து அந்த விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகூ மஞ்சள் தூளை கலந்து புண் உள்ள இடத்தில் வைத்தால் புண்ணும் ஆறும். மேலும் காலில் உள்ள ஆணியும் குணமாகும்.