bangkok: பிரசவம் முடிந்த பின் செய்யப்படும் தையல் போடும் மருத்துவத்தில் மருத்துவர்கள் செய்த தவறால் 18 ஆண்டுகள் அவதி படும் பெண்.
தாய்லாந்து நாட்டில் உள்ள நரத்திவாத் பகுதியில் வசித்து வருகின்ற ஒரு இளம் பெண்ணுக்கு அடிக்கடி வயிற்றின் அடிப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை தி இண்டிபெண்டன்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் இந்த பெண்ணுக்கு பிரசவம் முடிந்த பின்பு செய்யப்பட்ட சிகிச்சையில் மருத்துவ பணியாளர் ஒருவர் சிகிச்சை செய்யும் ஊசி ஒன்றை தவறுதலாக பிறப்புறுப்பில் விட்டு விட்டார்.
தையல் போடும் போது நடந்த இந்த அசம்பாவிதத்திற்கு பிறகு, அந்த ஊசியை எடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் அந்த ஊசியை எடுக்க எவ்வளவோ முயற்சியை செய்துள்ளனர். ஆனால் அந்த ஊசியை விரலால் தேடியும் எடுக்கும் முயற்சியில் தொவியடைன்தனர்.
இதை மேற்கொண்டு செய்தால் அதிகம் இரத்தம் வெளிப்படும் என்று பயந்து, அந்த ஊசியை எடுக்காமலேயே உள்ளேயே வைத்து தையல் போடும் முடிவுக்கு வந்துள்ளனர்.அந்த பெண்ணுக்கு தற்போது 36 வயது. இந்த பெண் 18 ஆண்டுகளாக இந்த ஊசியுடன் தவித்து வருகிறார்.
18 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒரு செவிலியர் செய்த தவறினால் இன்று வரை அவதி பட்டு வருகிறார். இந்த ஊசி இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருப்பதால் இதனை எடுப்பதில் பெரிய சிக்கலாக உள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு மருத்துவமனை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.