இந்தியாவில் இப்பொழுது கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற்று வருவதால் அனைத்து பள்ளிவாசல்களிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் கட்டாயமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தொழுகை கூடிய ஜும்மா தொழுகையிலும் நேர கட்டுப்பாடு குறிப்பிட்டு அதாவது மதியம் 1 மணிக்கு தொழுகை முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் எம். எஸ். சமி.நவாஸின் இதற்கான அறிவிப்பில் கையெழுத்திட்டு பகிர்ந்து இருக்கிறார்.
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி சாதாரண தரப் பரீட்சை நடைபெறக்கூடிய இடங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை பள்ளிவாசல்களுக்கு உள்ளேயே பயன்படுத்திக் கொள்ளுமாறும் பகல் நேரங்களில் வெளியில் ஒளிபெருக்கிகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சாதாரண தரப்பரிட்சை மார்ச் 17ஆம் தேதி துவங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிவடையும் வரை இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மார்ச் 17 முதல் மார்ச் 26 வரை நடைபெறக்கூடிய இந்த சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் கவனத்துடன் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் மாணவர்களை தொந்தரவு செய்வது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற முடிவுகளை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் துணை புரிய வேண்டும் என்றும் பள்ளி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.