Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் பதவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கின்ற மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

சென்னை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாடு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆர்எஸ் மங்கலத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வேடசந்தூர் தேவாலா மேல் பவானி ஆணை பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழையும் அவிநாசி காங்கேயம், சத்தியமங்கலம், நத்தம், அரவக்குறிச்சி, பரமக்குடி போன்ற பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

லட்சத்தீவு குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்று சொல்லப்படுகிறது

ஆகவே அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version