வந்துவிட்டது காவலர்களுக்கு புதிய வசதி !! இனிமேல் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை ஈசியா கண்காணிக்கலாம்!!
இக்காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நெரிசலை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவலர்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் அவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஒரு திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டமானது நேற்று சென்னை வேப்பேரியில் தொடங்கப்பட்டது. இந்த விழாவிற்கு பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் மற்றும் சி.சரத்கர் தலைமை வகித்தனர். மேலும் அவர்களுடன் இணைந்து பி.சரவணன், சக்திவேல், சமய்சிங் மீனா போன்றவர்களும் இந்த விழாவில் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தை சென்னை பெருநகர காவலர் ஐஐடி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் மேப் உருவாக்கியுள்ளார்கள்.இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் தெரிந்துக் கொள்ளவும் முடியும். இதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு பெருநகர காவல்துறை 96 லட்சம் கட்டணமாக செலுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் வாகன நெரிசல் ஏற்பட்டவுடன் அந்த இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்ய உதவுகிறது.
மேலும் இதனை பயன்படுத்துவதால் சாலையில் நேரிடும் விபத்துகள், சாலையில் ஏற்படும் தீடீர் பள்ளங்கள், தடைகள் பற்றிய தகவல்கள் கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதனால் போக்குவரத்து காவலர்கள் வாகன நெரிசலை துல்லியமாக தெரிந்து கொள்ள முடிவும். தற்போது இத்திட்டம் சென்னை மாநகரில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. பின்வரும் காலத்தில் இந்த திட்டம் மற்ற மாவட்டங்களிலும் தொடங்க வாய்ப்புள்ளது.