Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூகுள் மேப்பில் செய்துள்ள புதிய அம்சம் !! இனி பயம் இல்லாமல் GOOGLE MAP பயன்படுத்தலாம்!!

A new feature in Google Maps

A new feature in Google Maps

india: மக்கள் அதிகம் பயன்படுத்தும் google map செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது  google நிறுவனம்.

google map செயலியை அனைத்து வகையான மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.  யார் எங்கு செல்ல வேண்டுமானாலும் map பயன்படுத்தி செல்வது வழக்கமாகிவிட்டது. அதுவே சில சமயங்களில் ஆபத்தாகவும் முடிவடைகிறது. இந்நிலையில் google நிறுவனம் ஒரு புதிய air view+ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உதவும் வகையில் இந்த புதிய air view+  என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அதிலும் குறிப்பாக டெல்லியில் அதிக அளவிலாக மாசு அபாயகரமான அளவுக்கு. உள்ளது இந்நிலையில் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அம்சத்தின் மூலம் கூகுள் ai மூலமாக இயக்கப்படும் air view+ அம்சம் இந்திய முழுவதும் உள்ள மக்களுக்கு google map பயனர்களுக்கு கூகுள் மேப் ல் உடனுக்குடன் காற்றின் தரம் குறித்து தகவலை வழங்கும் அதன் பின் இது சுற்றுச்சூழல் கண்காணிப்பு அரசு நிறுவனகளுக்கு காற்றின் தர அளவீடுகளை காண உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ப்ளை ஓவர் அம்சமும் பயனுள்ள வகையில் உள்ளது. அதாவது ஒரு நகரத்திற்குள் செல்லும் போது ப்ளை ஓவர் அருகே செல்லும்போது மேலே செல்ல வேண்டுமா அல்லது கீழே செல்ல வேண்டுமா என்ற குழப்பத்தின் போது இனி ப்ளை ஓவர் அலர்ட் உதவியாக இருக்கும் என கூறபடுகிறது

Exit mobile version