ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
முதலில் ரேஷன் வாங்குவதற்கென ஒரு கையேடு இருந்தது கடந்த சில ஆண்டுகளாக அவை ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் கார்டு கொண்டு சென்று கைரேகை பதிவு செய்து ரேஷனில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில் விவாசாயிகள் மற்றும் களத்து மேடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு கை ரேகை அழிந்து விடுகின்றது.
அதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு பொருள் வாங்க வரும் பொழுது அவர்களின் கைரேகை சரிவர வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் பயோமெட்ரிக் மூலமாக பொருட்கள் பெறுவது சிரமமாக உள்ளது.இதனால் பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
மேலும் கைரேகை பதிவாக விட்டாலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்து பொருட்களை பெரும் முறை அமலில் இருகின்றது. இதனையடுத்து கண் கருவிழி மூலமாக பொருட்களை பெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் முன்னோடித் திட்டமாக இரண்டு பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் ,கேரளம் ,தெலுங்கானா,அஸ்ஸாம் ,உத்திர பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் முழுமையாக கண் கருவிழி மூலமாக ரேஷன் பொருட்களை பெரும் திட்டம் அமலில் இருகின்றது என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.