பண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை!
அக்டோபர் மாத முதலில் இருந்தே தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளது.அந்த வைகையில் முதலில் காந்தி ஜெயந்தி ,ஆயுதபூஜை ,விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றது. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.அப்போது அசம்பாவிதம் நேராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதியில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வர வாய்ப்புள்ளது.இதனையடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் முயற்சியாக ,போலியான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நகரம் முழுவதும் வைத்துள்ளனர்.
அதனை போலீசார் கண்காணித்து தகுந்த சோதனை செய்கின்றார்களா என சோதனை நடத்தப்படுகின்றது.அந்தந்த பகுதிகளில் போலியான வெடிகுண்டுகளை போலீசார் கண்டுபிடிக்க தவறினால் ,அவர்களின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.15 போலியான வெடிகுண்டுகளை வைத்து அவற்றை போலீசார் கண்டறிகிறார்களா என சோதனையில் டெல்லி சிறப்பு படை ஈடுப்பட்டது.
15 வெடிகுண்டுகளில் சரியான நேரத்தில் 10 வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றினார்கள் இது போன்ற சோதனையும் ரோந்து பணியும் அதிகரிக்கப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.