Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்!

A new project launched by the Chief Minister! Affordable groceries!

A new project launched by the Chief Minister! Affordable groceries!

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்!

இந்த மாதம் தொடங்கியதில் இருந்து பண்டிகை நாட்களாக உள்ளது.முதல் வாரத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்றவைகள் கொண்டாடப்பட்டது.மேலும் இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையை வருகின்றது அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை சிறப்பங்காடி நடத்தப்படுகின்றது.

அதனையடுத்து இந்த மக்கள் மளிகை சிறப்பங்காடி புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் வளாகம் ,வில்லியனூர் கோபாலசாமி நாயக்கர் திருமணம் நிலையம் ,அரியாங்குப்பம் பாண்டுரங்கா திருமண நிலையம் ,திருக்கனூர் விஜய் திருமண மகால் ,பாகூர் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் இவை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மக்கள் மளிகை சிறப்பங்காடி மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என புதுவை அரசு எதிர்பார்க்கின்றது.

Exit mobile version