மத்திய அரசு தொடங்கிய புதிய திட்டம்!! இனி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்!! 

0
74

மத்திய அரசு தொடங்கிய புதிய திட்டம்!! இனி குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்!!

சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது.   அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம்  எழுந்திருந்தார்.

மேலும் இந்த உயர்வை  தமிழக அரசு பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு ரேஷன் கடை மூலம் தக்காளியை கொடுத்து வருகிறது. இந்த உச்சக்கட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதிருந்தார்.

இது போன்ற விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவு பாதிக்கபட்டுள்ளார்கள். மேலும் மத்திய அரசு மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் துவரப்பருப்பு தமிழகத்திற்கு தர வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களை விடுவிடுப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும்.

அதனையடுத்து உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டும். மேலும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் சில உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க அனைத்து மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதனையடுத்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பருப்பு வகைகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு பாரத் தால் திட்டதின் கீழ் ஒரு கிலோ பருப்பை 60 ரூபாய் விற்பனை செய்ய புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். மேலும் 30 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஒரு கிலோ 55 ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.