பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!!
தற்போது புதிய வகை வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவியது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் சுமார் 69 கோடி பேரை தாக்கிய இந்த வைரசால் இதுவரை சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அடுத்து இந்த வைரஸ் மாறுபாடு அடைந்து கடந்த 3 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்து வருகிறது. தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையால் இந்த வைரசின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல், என சில நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் பிஏ.2.86 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) இந்த வைரசின் பரவல் மற்றும் பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்த மையம் தனது டிவிட்டர் தளத்தில் கொரோனாவை ஏற்படுத்தும் வைரசின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டு உள்ளது’ என கூறியுள்ளது. இதுகுறித்த பல தகவல்களை சேகரித்து விரைவில் வெளியிடப்படும் என சிடிசி அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொடர்பாக WHO உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் இந்த வைரஸ் பற்றி கூறியதாவது,
சுகாதாரம் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளபோது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கிய படிப்பினையை கொரோனா நமக்கு கற்று தந்தது. உலகம் முழுவதிலும் இதனை அறிந்துக் கொண்டாலும், தற்போது கொரோனா தொற்று அவசர நிலையில் இல்லை என்றாலும் உலக மக்களுக்கு ஒரு அச்சுறுத்தும் வகையாகவே உள்ளது. ஏராளமான கொரோனா மாறுபாடுகளை WH0 வகைப்படுத்தி உள்ளது.
மேலும் பிஏ.2.86 என்ற மாறுபாடு கொண்ட வைரஸ் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து நாடுகளும் மீண்டும் கண்காணிப்பை தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. எனவே தொற்றுநோய் ஒப்பந்தம் பற்றி இறுதி செய்யுமாறு அனைத்து நாடுகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சுகாதார சபையில் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் தொடங்க இருக்கும் டிஜிட்டல் சுகாதாரம் பற்றிய உலகளாவிய முயற்சிக்கு உலகளாவிய வியூகங்களை ஆதரித்து இது தொடர்பான பிற முயற்சிகளையும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார மந்திரி மான்சுக் மாண்டவியா உள்பட ஜி 20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கலந்துக் கொண்டனர்.