MARRIAGE AGE FOR WOMEN:பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் நிலைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் குழந்தை திருமண தடைச் சட்டம் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் வாயிலாக பெண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 21 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்டுள்ள வயதிற்கு குறைவாக திருமணம் நடைபெற்றால் இந்த சட்டத்தின் மூலம் அதை தடுக்க முடியும்.
இச் சட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும். இந்த நிலையில் பெண்களின் திருமண வயது ஆணுக்கு நிகராக 21 ஆக மாற்ற கடந்த 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இருந்த போதிலும் இந்த மசோதா நடைமுறைக்கு வரவில்லை. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான திருமண வயதை 21 ஆக மாற்ற குழந்தை திருமண சட்டம் இந்த மசோதாவை கொண்டு வந்தது.
மேலும் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் தொடர்பான நிலைக்கு ஆலோசனை அடுத்த வாரம் நடைபெறுகிறது. பெண்களின் திருமண வயதை 21 ஆக மற்ற பெண்கள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு 18 வயதிலேயே திருமணம் செய்து வைத்தால் அவர் பொருளாதார ரீதியாக எந்த வித முன்னேற்றமும் அடைந்து இருக்க மாட்டார்.
மேலும் 18 வயதில் பெண்கள் கல்லூரி படிப்பை கூட முடித்து இருக்க மாட்டார்கள். மேலும் பெண்களை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து பெண்களை பாதுகாக்க திருமண வயதை ஆண்களுக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே திருமண வயதை மறு நிர்ணயம் செய்வதற்கான சிறப்பு குழு நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.