தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

0
128
#image_title

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

நெஞ்சு சளியால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.

நெஞ்சு சளி அறிகுறி:-

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி மற்றும் தலைபாரம்

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

*அதிக சளி மற்றும் வறட்டு இருமல்

*நெஞ்சு எரிச்சல்

*சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்

இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவல்லி

*சுக்கு

*மிளகு

*பூண்டு

*தேன்

கஷாயம் செய்யும் செய்முறை…

ஒரு உரலில் சிறிதளவு கருப்பு மிளகு சேர்த்து மற்றும் சுக்கு சேர்த்து இடித்துக் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளவும். அடுத்து 1 பல் பூண்டு உரலில் போட்டு தட்டிக் ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

அடுத்து 2 அல்லது 3 கற்பூரவல்லி இலைகளை சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். தண்ணீர் கொதிக்கும் தருணத்தில் இடித்து வைத்துள்ள கற்பூரவல்லி, சுக்கு, மிளகு, பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.

1 1/4 கிளாஸ் தண்ணீர் 3/4 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து பருகினால் நாள்பட்ட நெஞ்சு சளி முழுமையாக கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.