Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர்!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

A physics teacher sexually harassed a 10-year-old student!!

அரியலூர் மாவட்டம் வடக்கு திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ராஜீவ்காந்தி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கடந்த 7-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவிக்கு ராஜீவ்காந்தி. அதனையடுத்து நேற்று மதியம் உணவு இடைவேளை போது அவர் தனது உணவு பையை ஆசிரியர் அறையில் வைக்கும்படி இந்த 5-ம் வகுப்பு மாணவி இடம் கூறினார்.

அதன் பின்பு அந்த உணவு பையை எடுத்து கொண்டு அறைக்கு சென்றயுடன் பின்னால் வந்து கதவை மூடியுள்ளார். அதனால் அச்சம் அடைந்த மாணவி பயத்தில் அலறியுள்ளார். அந்த மாணவி வாயயை மூடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் பற்றி யாரிடம்மாவது கூறினால் உன்னை கொலை செய்தது புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அச்சம் அடைந்த மாணவி இந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறாமல் மனஅழுத்ததில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது தாய் மாணவி நெஞ்சுப்பகுதியில் காயம் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

மேலும் இதை பற்றி மாணவி இடம் விசாரணை செய்த போது அவர் அந்த உண்மையை தாயிடம் கூறினார். மேலும் இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலஷ்மி தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்தது ராஜீவ்காந்தி கைது செய்தனர். மேலும் அவரை காவல்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்திஉள்ளது.

Exit mobile version