ஒரு துண்டு பரங்கிக்காய் போதும்.. சிறுநீரகத்தில் உள்ள மொத்த கற்களும் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும்!!
மஞ்சள் பூசணி,சர்க்கரை பூசணி,அரசாணிக்காய் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பரங்கிக்காயில் நார்ச்சத்து,பொட்டாசியம்,இரும்புச்சத்து,கால்சியம்,காப்பர்,ஜிங்க்,வைட்டமின் ஏ,பி,டி,சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
பரங்கிக்காய் தோல்,சதை பற்று,விதை என அனைத்தும் சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.வாரத்தில் ஒருவேளை பரங்கிக்காய் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பொரியல்,ஜூஸ் என்று தங்களுக்கு பிடித்தபடி சாப்பிட்டு வந்தால் மருத்துவச் செலவு மீதமாகும்.
பரங்கிக்காய் அதிகளவு நீர்சத்துகள் நிறைந்தவை என்பதால் தினமும் இதை ஜூஸாக எடுத்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற பரங்கிக்காயை அரைத்து சாறு எடுத்து குடித்து வர வேண்டும்.ஒரு கிளாஸ் பரங்கிக்காய் சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் இருமல் பாதிப்பு நிற்கும்.தினமும் இருவேளை பரங்கிக்காய் சாறு அருந்தி வந்தால் பித்தப்பை கல் பாதிப்பு குணமாகும்.இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் நீங்கி மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.பரங்கிக்காய் உடலில் உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் பரங்கிக்காய் சாறு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.பரங்கிக்காயின் சதை பற்றை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் சிறுநீரகத்தில் உள்ள மொத்த கற்களும் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும்.