அனைத்து நாடுகளும் இந்த நூற்றாண்டு மக்கள் தொகை சரிவை சந்தித்து வருவது வழக்கமாகி வருகிறது. இதற்கு முன் நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பை தடுக்க பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த நூற்றாண்டு அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
அதுபோலதான் ஜப்பான் தற்போது ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதுமானது என்று டோக்கியா மாநகராட்சி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டமானது வருகிற ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்கள் முதல் அமலுக்கு வரும் என்று டோக்கியோ கவர்னர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த குழந்தை மற்றும் குழந்தை பராமரிப்புக்காக வேலையை விட தேவையில்லை என்பதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் டோக்கியோ வில் உள்ள ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 3 அல்லது நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். சம்பல குறைப்புடன் வேலை நேரத்தையும் குறைத்து கொள்ளலாம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் தம்பதிகளுக்காக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது டோக்கியோ.