அக்தா: அக்தா விமான நிலையம் கஜகஸ்தான் நாட்டில் உள்ளது. அங்கிருந்து அவசர அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய நாட்டில் உள்ள குரோசனி நகருக்கு புறப்பட்டது ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம். அதில் 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என 72 பேர் பயணம் செய்து கொண்டிருந்த அந்த விமானம் வான்வெளியில் பாதி தொலைவில் பறந்து கொண்டிருந்தது.
திடீரென அந்த விமானத்தில் இயக்குவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது விமான ஓட்டுனர் அதை தடுத்து கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையிலேயே தரையிறக்க முடிவு செய்துள்ளார். அவ்வாறு தரையிறக்க முடிவு செய்த பின் அந்த விமான நிலையத்துக்கு அருகே சென்ற போது பைலட்டின் கட்டுப்பாட்டில் இருந்து தவறியுள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து நேராக தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் தகதகவென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதில் பயணம் செய்த 67 பேரில் தற்போது கிடைத்த தகவல் படி 42 பயணிகள் பலியாகியுள்ளனர். மேலும் 25 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மேற்கொண்ட விசாரணையில் பனிமூட்டம் தான் விமானத்தை இயக்க முடியாத நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.மேலும் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.