அருள் மொழி வர்மன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! அடுத்து தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 3!!

0
122

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை சோழர்களின் பெருமையை கூறுவதாகவும் அவர்கள் வாழ்ந்த வாழ்வியலை எதார்த்தமாக எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பலரும் பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க முயன்று பின் அது தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் மணிரத்னம் அவர்களோ அதனை சாதித்து காட்டியுள்ளார்.

மொத்தம் 800 கோடி ரூபாயை வசூலித்த பொன்னியின் செல்வன் படம் ( பாகம் 1 – 2 ) ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த படங்கள் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றும் கூறலாம்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியதேவனாக கார்த்திக், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.இது மட்டும் இல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

70ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகம் ஒன்று பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தற்போது வெளியாகி இருந்த நிலையில், அதன் பிரமோஷனில் பேட்டி அளித்த இவரிடம் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் எப்பொழுது எடுக்கப்படும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஜெயம் ரவி அவர்கள் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. என்னிடமும் கேட்டார்கள் நான் இன்னும் எத்தனை பாகங்கள் எடுத்தாலும் அதிலும் நடிப்பேன் என்று கூறிவிட்டேன். காத்திருங்கள் சீக்கிரமாக பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம் குறித்த செய்தி வெளியாகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.